சினிமா செய்திகள்

கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கவுதம் வாசுதேவ் மேனன் தொடர்பான வருமான வரி வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பிரபல இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் தொடர்பான வருமான வரி வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

போட்டான் கதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக 2011ஆம் ஆண்டு பதவி வகித்த கவுதம் வாசுதேவ் மேனன், ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முறையாக கம்பெனிகள் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில், 2013-14 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து, அந்த நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக சென்னை எழும்பூர் ஐகோர்ட்டில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குறித்த நிதியாண்டிற்கு முன்பே அவர் இயக்குநர் பதவியில் இருந்து விலகியிருப்பதை கருத்தில் கொண்டு, அவர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT