சினிமா செய்திகள்

"மெட்ராஸ் மேட்னி" படத்தின் டிரெய்லர் வெளியீடு

காளி வெங்கட், சத்யராஜ் நடித்துள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரும் ஜூன் 6ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியானது.இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு இளைஞன் பணியன் அணிந்துக் கொண்டு வீட்டு வாசலில் நிற்கிறான். அவன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கோவிலில் நாய் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர்.

'மெட்ராஸ் மேட்னி' படத்தின் 'என்னடா பொழப்பு இது' எனத்தொடங்கும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில், 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT