மதுரையில் உள்ள ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் மட்டும் ‘மண்டாடி’ படம் 25 நாட்களில் ரூ1 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.
சூரியின் நடிப்பில் கடந்த 10ந் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற “மண்டாடி” திரைப்படம் உலகளவில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘மண்டாடி’ பட இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு நடிகர் சூர்யா வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரையில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்கில் மட்டும் ‘மண்டாடி’ படம் 25 நாட்களில் ரூ1 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.