சினிமா செய்திகள்

“நாகபந்தம்” படத்தின் டீசர் வெளியிட்ட மகேஷ்பாபு

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘நாகபந்தம்’ படத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளனர்.

இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘நாகபந்தம்’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை நபா நடேஷ் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிஷேக் நாமா இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘நாகபந்தம்’ படத்தின் டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. மகேஷ்பாபு இப்படத்தின் டீசரை வெளியிட்ட உடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏராளமான உற்சாகத்துடன் புதிய உயரங்களுக்கு உயர்ந்தது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

SCROLL FOR NEXT