சினிமா செய்திகள்

கதாநாயகனாக அறிமுகமாகும் 'மாமன்' பட இயக்குனர்.. பர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவான வாரண்ட் தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சென்னை,

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி நடித்த ‘மாமன்’ படத்தை இயக்கியிருந்த அவர், தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் இணையத் தொடரான வாரண்ட் தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த அதிரடி குற்றவியல் தொடர், சாதாரண காவலரான ‘கோட்டை கருப்பசாமி’யின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த தொடர், வரும் 22, 2026 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது.