சென்னை,
அடுத்த ஒரு மாதத்திற்குள் மட்டும் மமிதா பைஜுவின் 3 திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
"பிரேமலு" திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த "டியூட்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார் மமிதா பைஜு. அதன்படி, அடுத்த ஒரு மாதத்திற்குள் மட்டும் மமிதா பைஜுவின் 3 திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
அவற்றில் முதலில், விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவாகியுள்ள "ஜனநாயகன்" வெளியாக உள்ளது. இந்தப் படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையடுத்து, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள "விஸ்வநாத் & சன்ஸ்" திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதைத் தொடர்ந்து, நிவின் பாலியுடன் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள மலையாளத் திரைப்படமான "பெத்லகேம் குடும்ப யூனிட்" ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவ்வாறு மிகக் குறைந்த இடைவெளியில் மூன்று மொழிகளில் அவரது படங்கள் ரசிகர்களை சந்திக்கவுள்ளன.
இயல்பான நடிப்பு மற்றும் திரை இருப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மமிதா பைஜுவுக்கு இந்த மூன்று படங்களும் முக்கியமான திருப்புமுனையாக அமையலாம். இந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றால், தென்னிந்திய சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக அவர் உருவெடுப்பார்.