சினிமா செய்திகள்

மம்முட்டி - மோகன்லால் நடிக்கும் “பேட்ரியாட்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகிறது.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘பேட்ரியாட்’ . பிரபல இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘காட்டுத் தோட்டப்போல்’ பாடல் வெளியானது. இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT