சினிமா செய்திகள்

நடிகர் அக்சய்குமார் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

மும்பை,

நடிகர் அக்சய்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் உள்ள கல்லூரியில் நடந்த சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் மூலம் தனது 13 வயது மகளுக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி பேசினார்.

தனது மகள் ஆன்லைன் கேம் விளையாடியபோது அதன் மூலம் அறிமுகமான நபர் அவளிடம் நிர்வாண படத்தை அனுப்புமாறு கேட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து அக்சய்குமாரின் மகளுக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் அக்சய்குமார் மகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்து உள்ளனர். அவர் இதுபோன்று மற்ற பெண்களுக்கும் தொல்லை கொடுத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.