சினிமா செய்திகள்

‘மண்டாடி’ - ‘சர்தார் 2’.. பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் எது தெரியுமா?

ஒரே நாளில் வெளியான இரு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஒரே நாளில் வெளியான இரு படங்களில், முதல் 6 நாட்களின் வசூல் நிலவரத்தில் ‘மண்டாடி’ ரூ.69 கோடியை கடந்து கவனம் ஈர்த்துள்ளது.

சூரியின் ‘மண்டாடி’

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான திரைப்படம் ‘மண்டாடி’. இப்படத்தில் சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூரியின் நடிப்பு, கடல் காட்சிகள், படகு போட்டி காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை கவனம் பெற்றுள்ளன.

கார்த்தியின் ‘சர்தார் 2’

இதே நாளில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

6 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

‘மண்டாடி’ திரைப்படம் 6-வது நாளான செப்டம்பர் 15-ம் தேதி இந்தியாவில் ரூ.4.40 கோடி நிகர வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.58.78 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் ரூ.10.65 கோடி வசூல் செய்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ‘மண்டாடி’ திரைப்படம் ரூ.69.43 கோடி வசூலை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ‘சர்தார் 2’ திரைப்படம் 6-வது நாளில் இந்தியாவில் ரூ.54 லட்சம் நிகர வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.20.47 கோடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் வெளியான இரு படங்களில், முதல் 6 நாட்களின் வசூல் நிலவரத்தில் ‘மண்டாடி’ ரூ.69 கோடியை கடந்து கவனம் ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT