சினிமா செய்திகள்

'குட் நைட்' படத்தின் டீசரை வெளியிட்ட பொன்னியின் செல்வன்..!

'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள 'குட் நைட்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'குட் நைட்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT