மணிகண்டன் நடித்த ‘மக்கள் காவலன்’ படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கிய படம் ‘மக்கள் காவலன்’. இப்படம் கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையை சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது.
இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, அருள் மோசஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்திற்கும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
மணிகண்டன் நடித்ம ‘மக்கள் காவலன்’ படம் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘இக்னோர்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை யோகி பி, நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை எம்கே பாலாஜி எழுதியுள்ளார்.
‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘இற இறகாக’ என்ற பாடல் வெளியானது. ஜோதி கண்ணாவின் எழுதிய இந்தப் பாடலை நிவாஸ் கே பிரசன்னா இந்தப் பாடலை பாடியுள்ளார்.
காவல்துறை சார்ந்த திரைப்படம் என்றாலும் சில அரசியல் கருத்துகள் மற்றும் வசனங்களால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘மக்கள் காவலன்’ படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.