சினிமா செய்திகள்

மங்காத்தாவா, கோட்-ஆ?… பிரேம்ஜி பதிலால் அதிர்ந்த அரங்கம்!

‘மங்காத்தா’ மற்றும் ‘கோட்’ 2 படங்களில், “உங்களுக்கு பிடித்தது எது?” என்ற கேள்வி பிரேம்ஜியிடம் கேட்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி. நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையுடன் திரையுலகில் தனித்த இடம் பிடித்துள்ளார்.

‘சென்னை 600028’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’, ‘கோவா’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’, ‘மாநாடு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களில் இடம்பிடிப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்திலும் பிரேம்ஜி நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரேம்ஜியிடம் தொகுப்பாளர் சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை முன்வைத்தார். திரையில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ மற்றும் விஜய் நடித்த ‘கோட்’ படங்களின் காட்சிகள் காட்டப்பட்டு, “உங்களுக்கு பிடித்த படம் எது?” என்று கேட்டார்.

சில நொடிகள் யோசித்த பிரேம்ஜி, தயக்கமின்றி “மங்காத்தா” என்று பதிலளித்தார். இதைக் கேட்டவுடன் அரங்கமே கைத்தட்டலால் முழங்கியது. ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிய அந்த தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.