சினிமா செய்திகள்

மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை இளையராஜா இன்று தேனியில் தொடங்கி வைத்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரியங்கா மோகன், கயாடு லோகர், கதிர் நடிக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்

வெற்றிப்படங்களுக்கு பிறகு புதிய முயற்சி

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி'யை இயக்க உள்ளார்.

இளையராஜாவுடன் முதல் முறையாக இணையும் மாரி செல்வராஜ்

இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'வாழை' படத்தின் தொடர்ச்சியா?

'மஞ்சணத்தி' திரைப்படம், மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 'வாழை' படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமை கால வாழ்க்கையை மையமாக கொண்டு கதை நகரும் என கூறப்படுகிறது.

தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் மஞ்சணத்தி என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

“மஞ்சணத்தி” படப்பிடிப்பு தொடக்கம்

இந்த நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் முதல் படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை தேனியில் இளையராஜா கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT