சென்னை,
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக மாறியவர் தான் சத்யராஜ். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நடிப்புக்காக சொந்த ஊரான கோயம்புத்தூரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து, பல கஷ்டங்களையும் சவால்களையும் தாண்டி தான் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர் தற்போது வரை அவரது கொள்கைகளை பின்பற்றி வருகிறார்.
திமுக நிர்வாகியும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் பேட்டி ஒன்றில் குழந்தை பெறுவது குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகிவிட்டது. திருமணம் செய்து கொண்ட பிறகே குழந்தைகள் பெறலாம் என்பதை நான் ஏற்கவில்லை. திருமணமாகாமலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
மேலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசும் போது, “திருமணம் செய்த பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு முழு ஒப்புதல் உள்ளது” என கூறியுள்ளார். அதே போல் “எனக்கு ஜாதகம் இல்லை என்பதையே நான் பெருமையாக பார்க்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கை முடிவுகளுக்கு ஒருபோதும் என் தந்தை தடைகள் போட்டது கிடையாது. சுதந்திரமான முடிவுகளை எடுக்க அனுமதி கொடுத்துள்ளார். அவருக்கு என்னுடைய மகிழ்ச்சி தான் முக்கியம். நான் திருமணம் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது என் தேர்வு என்று அவர் விரும்புகிறார் என வெளிப்படையாக திவ்யா பேசியுள்ளார். சிலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வந்தாலும்,
இது என்ன மாதிரியான பேச்சு திவ்யா?. என்ன சத்யராஜ் சார், உங்கள் மகளின் பேச்சு சரியில்லையே. இது தான் வளர்ப்பா என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்தநிலையில், நான் ஒரு தீவிர பெரியாரியவாதி. ஜாதி-மத சடங்குகளில் தனக்கு உடன்பாடில்லை.
திருமணம் என்பது ஒரு தனிநபர் விருப்பம்..இன்றுள்ள மருத்துவ வசதிகளை பயன்படுத்தி திருமணம் இன்றியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.மகளின் முற்போக்கான கருத்துகளுக்கு நான் முழுமையாக ஆதவு தருவேன் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.