சென்னை,
கார்த்தி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். காதல், ஆக்சன், கமர்ஷியல் மற்றும் வரலாற்று கதைகளில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான வா வாத்தியார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தி, சர்தார் 2, மார்ஷல் மற்றும் கைதி 2 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். புதிய கூட்டணியில் உருவாகும் இந்த படம் குறித்து ரசிகர்களிடையே தற்போது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.