சினிமா செய்திகள்

அரபு மொழியில் வெளியான மம்முட்டி படம்

'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் மம்முட்டி கதாநாயகனாக அறிமுகமானார்.

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார்.

வைசாக் இயக்கிய இப்படத்தில் சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைக்க இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்.

கடந்த மே மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ.70 கோடி வசூலை பெற்றது. தற்போது இப்படம் வரும் 9-ம் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அரபு மொழியில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இதுவரை மலையாள படங்கள் அங்கு நேரடியாக மலையாளத்திலேயே வெளியாகி வந்தன. தற்போது மம்முட்டியின் 'டர்போ' திரைப்படம் அரபு மொழியில் வெளியாகி உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT