சினிமா செய்திகள்

“நடிகர்களை விட மாடல்களுக்கு சவால் அதிகம்” - ருக்மணி வசந்த் கருத்து

ருக்மணி வசந்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட திரை உலகில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற நடிகை ருக்மணி வசந்த், தற்போது இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ரிஷப் செட்டியுடன் நடித்த ‘காந்தாரா சேப்டர் 1’ திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். இதன் பின்னர், ரசிகர்கள் அவரை ‘நேஷனல் கிரஷ்’ என அழைத்து வருகிறார்கள்.

தற்போது நடிகர் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார். இதுதவிர தமிழிலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ருக்மணி வசந்தின் கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறும்போது, “நடிகர்கள் பஞ்ச் வசனங்கள் பேசியும், ஆக்ஷன் காட்சிகளில் நடித்தும் சமாளிக்கலாம். ஆனால் மாடல்களுக்கு அந்தச் சலுகை இல்லை. ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் மாடல் அழகிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். இன்றளவும் சினிமாவில் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வரும் விஷயம் அதுதான்,” என்று தெரிவித்துள்ளார்.