எர்ணாகுளம்,
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, இப்படம் வருகிற ஏப்ரல் 23ந் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்தபடம் முன்கூட்டியே ஏப்ரல் 4ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் வருகிற 4ந் தேதி மாலை 6 மணியளவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கவிதா திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் அங்கே வாருங்கள்... ஏனெனில் நானும் அங்கே இருப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.