சினிமா செய்திகள்

பணம் செலவழித்து போலி ஏஐ வீடியோக்கள் பரப்பப்படுகின்றன - நடிகை பிரதிபா!

தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்கள், உண்மையில் தனக்கான விளம்பரத்தையே உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது போலியான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள நடிகை பிரதிபா, இதுபோன்ற செயல்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

‘மகாநதி’ சீரியல் மூலம் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மகாநதி’ தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரதிபா. சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தனது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘இலவச விளம்பரமாகவே பார்க்கிறேன்’

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதிபா, சிலர் பணம் செலவழித்து தனது போலியான வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்கள், உண்மையில் தனக்கான விளம்பரத்தையே உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற போலி வீடியோக்களைப் பார்க்க நேர்ந்தால் அச்சப்பட வேண்டாம் என்றும், எதிர்மறையான கருத்துகளைப் புறக்கணித்து மன அமைதி தரும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். என்னைப் பற்றிய போலி வீடியோக்கள் மூலம் கவனத்தைப் பெற சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட பிரதிபா, அவர்களுக்குப் பதிலளிப்பதைவிடப் புறக்கணிப்பதே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT