மூக்குத்தி அம்மன் 2 
சினிமா செய்திகள்

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தனது மனதுக்கு நெருக்கமான படம்- நயன்தாரா நெகிழ்ச்சி

இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையில் காண்பதைக் காண தானும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சென்னை,

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தனது மனதுக்கு நெருக்கமான படம் என்பது குறித்து நடிகை நயன்தாரா த்னது எக்ஸ் தளபக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மனதுக்கு நெருக்கமான படைப்பு

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகும் நம் மனதை விட்டு நீங்குவதில்லை; அந்த வகையில் 'மூக்குத்தி அம்மன் 2' தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத அனுபவம்

மேலும், இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுந்தர் சி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா தனது மனமார்ந்த நன்றியைப் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் முன்னணி நடிகைகளான குஷ்பு, சினேகா, ரெஜினா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது தனக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆவலுடன் நயன்தாரா

மத்திய தணிக்கை வாரியத்திடம் இருந்து 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையில் காண்பதைக் காண தானும் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் நடிகை நயன்தாரா தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT