சினிமா செய்திகள்

ரூ.50 கோடி வசூலை கடந்த மிருணாள் தாக்குரின் “டகோயிட்”

ஷானெல் தியோ இயக்கத்தில் அடிவி சேஷ், மிருணாள் தாகூர் நடித்துள்ள ‘டகோயிட்’ படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்துள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் ‘டகோயிட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அடிவி சேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

எஸ்.எஸ்.சி கிரியேஷன்ஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. ஆக்சன் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் கடந்த 10ந் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, ஜயான் மரியா கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு சேஷ் கதை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மிருணாள் தாக்குர், அடிவி சேஷ் இணைந்து நடித்த ‘டகோயிட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

SCROLL FOR NEXT