சினிமா செய்திகள்

பா.ஜனதா எதிர்ப்பால் நீக்கப்பட்ட நடிகையின் வீடியோ... மீண்டும் பதிவிட மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பா.ஜனதா எதிர்ப்பால் நீக்கப்பட்ட நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை மாநகராட்சி சமூகவலைதளப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

மும்பை,

நீக்கப்பட்ட நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை, உடனடியாக மீண்டும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவிட்டனர்.

விழிப்புணர்வு வீடியோ

மும்பையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பிரபலங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மாநகராட்சி அதன் எக்ஸ் பக்கத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தி நடிகை தியா மிர்சாவின் வீடியோவை வெளியிட்டு இருந்தது.

பா.ஜனதா எதிர்ப்பால் நீக்கப்பட்ட வீடியோ

இந்து பண்டிகைகள் குறிவைக்கப்படுவதாக கூறி இந்த வீடியோவுக்கு எதிராக பா.ஜனதா மும்பை தலைவர் அமித் சாட்டம் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த மும்பை மேயர் ரிது தாவ்டே ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். இதையடுத்து தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை மாநகராட்சி சமூகவலைதளப்பக்கத்தில் இருந்து நீக்கியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மும்பை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அப்போது நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, நீலா கோகலே ஆகியோர், மும்பை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள், அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்ட நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை, உடனடியாக மீண்டும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT