தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக அனிருத் உயர்ந்திருக்கிறார். இவர் ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசைநிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அபாரமான பின்னணி இசைகளையும் உருவாக்கி வருகிறார்.
அனிருத் இசையமைப்பில் உருவான ‘அரவிந்த்’ என்கிற ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. மறைந்த தன் நெருங்கிய நண்பர் அரவிந்த்தின் நினைவாக இப்பாடலுக்கு அவரின் பெயரை வைத்துள்ளார். இதன் வரிகளும் இசையும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.