சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுடன் இசையமைப்பாளர் அனிருத் சந்திப்பு

அனிருத் இசையில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .

ஆட்டம் போட வைக்கும் இசையால் இளசுகளை ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் சமீபத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத்தின் காதல் குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. அதாவது பிரபல சினிமா தயாரிப்பாளரான கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் மவுனம் மட்டுமே பதிலாக இருந்து வந்தது.

அனிருத்-காவ்யா மாறன் திருமணம்

இருவரும் திருமண வாழ்க்கையில் இணையத் தயாராகி இருக்கிறார்கள். அதாவது கிரீஸ் நாட்டில் மாதம் நவம்பர் 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது.

‘ஜெயிலர் 2’ திரைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமானுடன் அனிருத் சந்திப்பு

‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .

ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனிருத் பாடிய பாடல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள ராமாயணா படத்தின் ‘ராவணா தாண்டவம்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT