சினிமா செய்திகள்

ஹாலிவுட் தரத்தில் தமிழ் படம் எடுப்பதே லட்சியம்- 'மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனர்

'மிஸ்டர் எக்ஸ்' படம் வருகிற 17ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

விஷ்ணு விஷால் நடிப்பில் 'எப்.ஐ.ஆர்.' படத்தை இயக்கி பேச வைத்த இயக்குனர் மனு ஆனந்த், தற்போது ஆர்யா, மஞ்சு வாரியர், சரத்குமார், கவுதம் ராம் கார்த்திக் உள்ளிட்டோரின் நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 17ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து மனு ஆனந்த் கூறும்போது, "நாட்டுக்கு உழைக்கும் போலீசாரும், ராணுவ வீரர்களும் கூட வெளியே தெரிந்து விடுவார்கள். ஆனால் நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக அகதிகளாக சுற்றித்திரியும் ரகசிய உளவாளிகள் பற்றி யாருக்குமே தெரியாது. அவர்களை கொண்டாடும் வகையில் தான் படங்கள் இயக்கி வருகிறேன். 'மிஸ்டர் எக்ஸ்' படம் இந்தியாவில் 1965-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையில் வெவ்வேறு இடங்களில் நடந்த ஏழு உண்மை சம்பவங்களின் தொகுப்பாகும். இது நமது உளவாளிகளின் பெருமையை ஊர் அறியச்செய்யும்.

கேரளாவில் பிறந்தாலும் என்னை வாழவைக்கும் தமிழ்நாட்டின் மீதே அதிகம் பற்று கொண்டிருக்கிறேன். ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படைப்பை எடுப்பதே லட்சியம். அதன் முன்னோட்டம் தான் எனது 'எப்.ஐ.ஆர்.', 'மிஸ்டர் எக்ஸ்' படங்கள். புதிய கதை எழுதி வருகிறேன். விரைவில் அறிவிப்பேன்”, என்றார்.