இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் கொடுத்த சிறப்பு பரிசு எதுவென்றால் ‘ஜெயிலர் 2’ படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கியதுதான் என அனிருத் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான ‘ஜெயிலர் 2’ வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, அதில் அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. படத்தின் வெற்றிக்கு அவரின் இசையும் ஒரு காரணம் என்று விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் அனிருத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் கொடுத்த சிறப்பு பரிசு எதுவென்றால் ‘ஜெயிலர் 2’ படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கியதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிறந்தநாள் இதுவரை இல்லாத பிறந்தநாளாக அமைந்துள்ளதாகவும் ரஜினி, நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ்க்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். நேற்று திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.