சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு, லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரபேக்கா நடித்த கெணத்த காணோம் படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இதில் யோகிபாபு பங்கேற்று பேசும்போது, ''இந்தப்படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குனர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார். ஆனால் படம் ரிலீசாகும் முன்பே அவர் மறைந்தது கவலையளிக்கிறது. இருந்தாலும் அவரது கனவு நிஜமாகி இருக்கிறது.
வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க திரையுலகினரும், ரசிகர்களும் என்னை ஊக்குவிக்கிறார்கள். அந்த ஊக்குவிப்பு தான் என்னை உந்து தள்ளுகிறது. என்னை பொறுத்தவரை என் ரசிகர்கள் தான் எனக்கு எல்லாமே.
சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன்'', என்றார்.