சினிமா செய்திகள்

"மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலினுடன் எனது முதல் படம்" - ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ

இயக்குனர் மாரி செல்வராஜுடன் பணியாற்றுவது சுவாரஸ்யமாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பரியேரும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கவனம் பெற்றிருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக 'மாமன்னன்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், தான் முதல் முறையாக மாரிசெல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மாரி செல்வராஜ் பணியாற்றும் விதம் முற்றிலும் மாறுபட்டதாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

A.R.Rahman (@arrahman) November 27, 2022 ">Also Read:

SCROLL FOR NEXT