புதுடெல்லி,
டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தனுஷுக்கு "இந்தியன் ஆப் தி இயர்" விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது;
"நான் செப் (சமையலர்) ஆகணும்னு ஆசைப்பட்டேன். தற்செயலாக நடிகனாகிவிட்டேன். இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, என் வழியில் எது வந்தாலும், அது முற்றிலும் என் பெற்றோரின் பிரார்த்தனைகள், என் ரசிகர்களின் ஆதரவு மற்றும் மகாதேவனின் ஆசீர்வாதங்களால்தான். இதற்கு நான் எந்தப் பெருமையும் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில் நான் ஒரு பெரிய வடிவமைப்பில் ஒரு கருவி மட்டுமே.
நான் என்ன செய்தாலும், எனது இரண்டு மகன்களும் என்னைப் பார்த்துப் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறேன். அதேபோல், எதிர்காலத்தில் அவர்கள் இருவரையும் நினைத்து நான் பெருமைப்பட வேண்டும் என்பதும் எனது ஆசை. என் மகன்களை மிகவும் நேசிக்கிறேன் என்று சொல்வது சாதாரணமான ஒன்றுதான். ஏனென்றால் ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளை நேசிப்பார். ஆனால், என் வாழ்க்கையில் இந்த இரண்டு மகன்களும்தான் மிகவும் முக்கியமானவர்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.