சினிமா செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் : நாகின் 3 தொடர் புகழ் நடிகர் கைது

இப்போது, மற்றொரு தொலைக்காட்சி நடிகரான 'நாகின் 3 புகழ் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார் .கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை

நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில் நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இப்போது, மற்றொரு தொலைக்காட்சி நடிகரான 'நாகின் 3 புகழ் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார் .கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேர்ல் வி பூரி 2013 ஆம் ஆண்டில் தில் கி நாசர் சே கூப்சுரத் மூலம் அறிமுகமானார், பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சிறுமி ஒருவரை மேலும் ஐந்து நபர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அவருடன் சேர்த்து மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் கூறியதாவது:-

இந்த சம்பவம் பழையது, ஆனால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாயுடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். நாங்கள் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்.பூரி நீதிமன்றத்தால் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாட்டீல் மேலும் தெரிவித்தார்.

டிவி தொடர்களில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமியை நடிகர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதற்கிடையில், இந்த செய்தி வெளியானவுடன், நாகின் 3 பூரியுடன் நடிக்கும் அனிதா ஹசானந்தனி அவருக்கு ஆதரவாக பேசினார். இன்ஸ்டாகிராமில் அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "சில முட்டாள்தனமான செய்திகளுக்கு பதில் அளிக்கிறேன் பேர்ல் வி பூரியை எனக்கு நன்றாக தெரியும்! இது உண்மையல்ல ... உண்மையாக இருக்க முடியாது .... எல்லாம் பொய்கள். விரைவில் உண்மை வெளிவரும். ஐ லவ் யூ பேர்ல் வி பூரி என கூறி உள்ளார்.

அனிதா ஹசானந்தனி தமிழில் வருசெமெல்லாம் வசந்தாம், சாமுராய், சுக்ரன்,நாயகன்,மகராஜா ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்