சினிமா செய்திகள்

என் மனதுக்கு நெருக்​க​மான படம் “நடிகையர் தில​கம்” - நடிகை கீர்த்தி சுரேஷ்

நாக் அஸ்​வின் இயக்​கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடித்த ‘நடிகையர் தில​கம்’ படம் வெளி​யாகி 8 வருடம் ஆனது.

1950 மற்றும் 60களில், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சாவித்ரி, சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து, சொத்துக்களை இழந்து 46 வயதில் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக வெளியானது. இதில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, மற்றும் பிரகாஷ் ராஜ், நாகசைதன்யா, விஜய் தேவரகொண்டா உட்பட பலர் நடித்திருந்தனர்.

நடிகை சாவித்​திரி​யின் வாழ்க்கை கதையை மைய​மாக வைத்​து, நாக் அஸ்​வின் இயக்​கிய படம், ‘நடிகையர் தில​கம்’. சாவித்​திரி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடித்​திருந்​தார்.

தமிழ், தெலுங்​கில் உரு​வான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது. இந்​தப் படத்​துக்​காகக் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்​கான தேசிய விருது கிடைத்​தது. இந்​தப் படம் வெளி​யாகி 8 வருடம் ஆனது.

இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்​போது, “என் மனதுக்கு நெருக்​க​மான படம் என்​றால் நிச்​சய​மாக ‘நடிகையர் தில​கம்’ படமாகத்​தான் இருக்​கும். அது மிக​வும் வித்​தி​யாச​மான கதா​பாத்​திரம். அந்த வேடத்​தில் முழு​மை​யாக என்னை ஈடு​படுத்​திக்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. உணர்வுப்​பூர்​வ​மாக​வும் மனதள​விலும் முழு​மை​யாக என்னை அதில் அர்ப்​பணித்​தேன். ஒரு கட்​டத்​தில், அந்த ​க​தா​பாத்​திரத்​தில் மூழ்​கி, என்​னையே அதில் தொலைத்​து​விட்​டேன்” என்​றார்.