நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘தி பாரடைஸ்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ஸ் விடியோ இந்திய அளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.