சினிமா செய்திகள்

நரச்ச நெத்தி முடி மயக்குதையா... வைரலாகும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பாடல்

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரிதுவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நரச்ச முடி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ரீலேகா பார்த்தசாரதி பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT