சினிமா செய்திகள்

நரேந்திர மோடியின் பயோபிக் படம்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை மா வந்தே என்ற பெயரில் சினிமாவாகிறது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். மலையால திரையுலகின் முன்னணி நடிகரான இவர் நடிப்பில் வெளியான மார்கோ ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. பான் இந்தியளவில் தனக்கான மார்க்கெட்டையும் உன்னி முகுந்தன் உருவாக்கியுள்ளார்.

இறுதியாக, இவர் நடித்த கெட் செட் பேபி திரைப்படமும் நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில், உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் சர்வதேச தரத்தில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT