சினிமா செய்திகள்

திருநங்கையாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சாரி விஜய் உயிரிழப்பு

திருநங்கையாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த வாரம் வெள்ளி கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகர் சஞ்சாரி விஜய் (வயது 38) சிக்கினார். இதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய் கிழமை) அதிகாலை 3.34 மணியளவில் அவர் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன.

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த ரங்கப்பா ஹாக்பித்னா என்ற அறிமுக படத்தில் நடிக்க தொடங்கிய அவர், நானு அவனல்ல அவளு என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றுள்ளார்.

அந்த படத்தில் அவர் திருநங்கை வேடமிட்டு நடித்தது ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. இதுதவிர தசவலா, ஹரிவு, ஒக்கரானே, கில்லிங் வீரப்பன், வர்தமான, சிப்பாயி மற்றும் அடுவா கோம்பே உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.