சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

சாமி தரிசனம் வெளியே வந்த இந்த ஜோடியை பார்த்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன் தாரா.. இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு உயிர், உலக் என்ற மகன்கள் உள்ளனர். பொது நிகழ்ச்சிகள், திருமண வீடுகள் என எங்கு சென்றாலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாகவே பெரும்பாலும் வருவதை பார்க்க முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோவில்களில் சாமி தரிசனம் செய்து வழக்கம்.

அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நயன் தாரா - விக்னேஷ் சிவன் நேற்று வருகை தந்தனர். ஏழுமலையான் கோவிலில் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் மனமுருகி வேண்டிக்கொண்டனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேதஆசீர்வாதம், சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து வெளியே வந்த இந்த ஜோடியை பார்த்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.