தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதே ஆண்டில் அக்டோபர் மாதம் இந்த தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் சினிமா மீது கொண்ட தீவிர ஆர்வத்தில் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், மலையாள, கன்னட சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் நடிக்க தொடங்கி தற்போது சல்மான்கானின் புதிய படமொன்றில் நயன்தாரா நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் சமீபத்தில் வெளியானது. சினிமா பணிகளில் நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதிகள் பிசியாக இருந்தாலும் குடும்பத்திற்கென்று நேரம் ஒதுக்கி கொண்டு இரட்டை குழந்தைகளுடன் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் தங்களது 4-வது திருமண நாளை குழந்தைகளுடன் வாடிகனில் கொண்டாடினார். திருமண நாள் மகிழ்ச்சியில் மனைவி நயன்தாரா, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அவரது புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாரா நமக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பே நயன் தாரா- விக்னேஷ் சிவன் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை வாரி குவித்துள்ளது.