சென்னை,
சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான ஆணவக் கொலைகளின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
'அருவா சண்ட' படத்தை தயாரித்த வி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். கமல் ஜி இயக்குகிறார். இதில் அறிவழகன் கதாநாயகனாகவும், ஹேமா ராஜ்குமார் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்கிறார். ரஷாந்த் அர்வின் இசையமைக்க, ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
இன்றைய காலகட்டத்திலும் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், ஆணவக் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் பிரச்சினையின் பின்னணியையும், ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களின் இரக்கமற்ற மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், "சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான ஆணவக் கொலைகளின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நெல்லை சீமையை மையமாகக் கொண்டே 'நெல்லை பாய்ஸ்' எனப் பெயரிட்டுள்ளோம்" என்றனர். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.