சென்னை,
நேபாளத்திலும் திபெத்தியப் பகுதியிலும் நடந்தவற்றைப் பார்த்தது, வாழ்க்கையில் முக்கியமானவை எவை என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டியது. ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். சமீபத்திய தகவலின்படி, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் 390-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பேரழிவு குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்,நேபாளத்திலும் திபெத்தியப் பகுதியிலும் நடந்தவற்றைப் பார்த்தது, வாழ்க்கையில் முக்கியமானவை எவை என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டியது. அது செல்வத்தைத் துரத்துவதோ, புகழைத் துரத்துவதோ, அங்கீகாரத்தைத் துரத்துவதோ அல்ல. ஒரு நொடியில் இவை அனைத்தும் இல்லாமல் போய்விடலாம்.
ஆழ்ந்த மூச்சை இழுத்து, நிதானித்து, உங்கள் குரலை உன்னிப்பாகக் கேட்டு, உங்களுக்குக் கிடைத்த இந்த வாழ்க்கை வாய்ப்பை மதித்துப் போற்றுங்கள். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகையின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.