சென்னை,
நடிகை கத்ரீனா கைபின் பிரசவத்துக்குப் பிறகான தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகை சமீரா ரெட்டி உடல் எடை குறித்த விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை கத்ரீனா கைப், ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவர் இந்தி நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வெளியில் தலைகாட்டாத அவர் சமீபத்தில் மும்பையில் உள்ள அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கணவர் விக்கி கவுசலுடன் கலந்து கொண்டார். அப்போது அவரை புகைப்படக்காரர்கள் புகைப்படங்கள் எடுத்தனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. ஏனெனில் நடிகை கத்ரீனா கைப் உடல் எடை கூடியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை உருவக்கேலியும், கிண்டலும் செய்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகை கத்ரீனா கைபின் பிரசவத்துக்குப் பிறகான தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நடிகை சமீரா ரெட்டி உடல் எடை குறித்த விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார். கத்ரீனா கைபின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பெண்கள் தங்களது உடலை ஏற்றுக்கொண்டு நேசிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், ‘Plumpy’, ‘Thicc’, ‘Curvy’, ‘Chubby’, ‘Healthy’, ‘Chunky’, ‘Golu’ உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. பல்வேறு உடைகளில் தனது உடல் தோற்றத்தை வெளிப்படுத்திய அவர், உடல் குறித்த சமூகத்தின் பார்வையை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பதை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அந்த பதிவில், “பிரபலமாக இருந்தாலும், இளம் பெண்ணாக இருந்தாலும், புதிதாக தாயானவராக இருந்தாலும், மற்றவர்கள் கூறும் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் உடலை நேசிக்க வேண்டும்” என சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.