சினிமா செய்திகள்

ஜெய் நடிக்கும் புதிய படம்... தென்காசியில் படப்பிடிப்பு தொடக்கம்!

அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.

தென்காசி,

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெய். தொடர்ந்து ‘சென்னை 28’, ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.

இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புதிய படம்

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.

ஹாரர் காமெடி கதைக்களம்

தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஏ.எம். பிரபாகரன் தயாரிக்கும் இப்படம், ஹாரர் காமெடி பாணியில் உருவாகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT