சினிமா செய்திகள்

தனுஷ் நடித்துள்ள 'கர' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

'கர' படத்திலிருந்து 'அய்யா அய்யா' என்ற லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கர படத்திலிருந்து 'அய்யா அய்யா 'என்ற லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT