சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய திருப்பம்

நடிகர் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்று உள்ளது.

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் வீட்டின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறார் என்பது நீதிமன்ற விசாரணையில் உறுதியாகியுள்ளது.

மும்பையின் ஜுஹு பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த அக்டோபர் 18ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். அவரது ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் இருவரும் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய மூவரை, ராஜஸ்தான் காவல்துறையினர் அக்டோபர் 19-ம் தேதி ராஜஸ்தானின் கோட்டா நகரில் கைது செய்தனர். அக்டோபர் 20-ம் தேதி டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 4 பேரை கைது செய்தனர். இந்த நால்வரும் ஷெராப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஆயுதங்களை பஞ்சாபிலிருந்து கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

பரோடாவில் கைது செய்யப்பட்ட இவர், ஷெராப்பின் துப்பாக்கிச் சூடு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தவர் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அனில் பண்டிட், அங்கித் மூலமாகவே பணபறிமாற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இவர், நேபாளம் வழியாக அனில் பண்டிட்டுடன் பணப் பரிவர்த்தனைகள் செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

துப்பாக்கிச்சூட்டுக்கு கிரிப்டோகரன்சி பணப் பரிமாற்றம்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் வீட்டின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறார் என்பது நீதிமன்ற விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு எதிரான வழக்கை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பின்னால் கிரிப்டோகரன்சி மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தொடர்புடைய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SCROLL FOR NEXT