சினிமா செய்திகள்

அமித்ஷாவை நேரில் சந்தித்த புதுமண தம்பதியினர்

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடிக்கு கடந்த 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. உதய்பூர் அரண்மனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 4ஆம் தேதி பிரமாண்டமான வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்களது சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

திருமணம் முடிந்தவுடன், அவர்கள் இந்திய பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்த சந்திப்பு குறித்து விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். அவருடன் கலாச்சாரம், சினிமா பற்றிப் பேசி அழகான நேரத்தைச் செலவிட்டோம். அவர் வழங்கிய விநாயகர் சிலையை எங்கள் பூஜை அறையில் வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.