சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகும் நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் கேயுரி புரொடக்சன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

டி.கே. இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் அப்படத்தை தயாரிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகை நித்யா மேனன். தமிழிலில் வெப்பம், ஓ காதல் கண்மணி, காஞ்சனா, 24, சைக்கோ, இருமுகன், இட்லி கடை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த தலைவன் தலைவி பெரிய வெற்றி பெற்றது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. நடிகை நித்யாமேனன் தெலுங்கு சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

சமீபத்தில் நடிகை நித்யா மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கேயுரி புரொடக்ஷனை தொடங்குவதாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

டி.கே. இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு கிருஷ்ணா, ஓவியா நடித்த ‘யாமிருக்க பயமே’, ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’, வைபவ், வரலட்சுமி நடித்த ‘காட்டேரி’, காஜல் அகர்வால் நடித்த ‘கருங்காப்பியம்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். பேண்டஸி வித் டார்க் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வி.எஸ். ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார்.

4 மொழிகளில்...

லியோ விஷன் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்- நித்யா மேனன்- இயக்குநர் டி.கே மற்றும் விக்ரம் கே. குமார் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல்களையும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT