சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய நோரா பதேஹி பாடல்

சஞ்சய் தத் உடன் இணைந்து நோரா பதேஹி நடித்துள்ள இந்த பாடல் வெளியாகியதும் வைரலாகியது.

மும்பை,

நடிகை நோரா பதேஹி தனது கேரியரில் பல ஐட்டம் பாடல்களில் நடனம் ஆடியிருந்தாலும், இதுவரை வெளியாகியவற்றில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய பாடல் இதுதான் என கூறலாம். அவர் நடித்துள்ள “‘திற நீ எந்தன் தரணி திற நீ” பாடல், விரைவில் வெளியாக இருக்கும் ’கே டி: தி டெவில்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

சஞ்சய் தத் உடன் இணைந்து நோரா பதேஹி நடித்துள்ள இந்த பாடல் வெளியாகியதும் வைரலாகியது. ஆனால், படக்குழு எதிர்பார்த்த காரணங்களுக்காக அல்ல. பாடல் வெளியானவுடன் அதன் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியநிலையில், பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை கண்டது.

சிலர் நோரா பதேஹியின் உற்சாகமான நடனத்தையும் ஸ்கிரீன் பிரசென்ஸையும் பாராட்டியிருந்தாலும், பலர் பாடலின் வரிகளையும் அதன் டோனையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த பாடலின் இந்தி வெர்ஷன் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் பதிப்புகள் இணையத்தில் உள்ளன.

இந்த திரைப்படத்தில் துருவ சர்ஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ஜிஷு சென்குப்தா, ரீஷ்மா நனையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகிறது.