சினிமா செய்திகள்

"சினிமாவில் எனக்கு எதுவும் எளிதாக கிடைக்கவில்லை"- கீர்த்தி சனோன் உருக்கம்

`காக்டெயில் 2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சனோன், பாலிவுட்டில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன், தற்போது ஷாகித் கபூர் ஜோடியாக 'காக்டெயில்-2' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹோமி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், `காக்டெயில் 2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சனோன், பாலிவுட்டில் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:- "சினிமா பின்னணி இல்லாமல் பாலிவுட்டில் நுழைந்ததால் ஆரம்பத்தில் பட வாய்ப்புகளுக்காக கடுமையாக போராடினேன். பல படங்களில் நடிப்பதற்காக இறுதிவரை தேர்வாகியும், அந்த வாய்ப்புகள் பின்னர் நட்சத்திர வாரிசுகளுக்கு கைமாறி சென்றன. சினிமாவில் எனக்கு எதுவும் எளிதாக கிடைக்கவில்லை.. ஒவ்வொரு வாய்ப்பையும் நான் போராடியே பெற்றேன். சினிமா குடும்பத்தில் இருந்து வராததால், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற பயத்துடனே பயணிக்க வேண்டி இருந்தது." என 'காக்டெய்ல் 2' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சனோன் உருக்கமாக பேசினார்.