சினிமா செய்திகள்

ஓ.டி.டி. தளத்தில் விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

தினத்தந்தி

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுசின் ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

தற்போது விஜய் சேதுபதி மலையாளத்தில் நடித்துள்ள 19 (1) (ஏ) என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து கொரோனா பரவலால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வி.எஸ்.இந்து இயக்கி உள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரண சிங்கம் படம் ஓ.டி.டி.யில் வந்துள்ளது. நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சிவா நடித்துள்ள சுமோ படம் ஓ.டி.டி.யில் வெளியாவது உறுதியாகி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு