சினிமா செய்திகள்

நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதியழகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில்,

'செம போத ஆகாதே' படம் வெளியாவதில் தாமதமானதால் ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடுகட்ட நடிகர் அதர்வா பணம் இல்லாமல் படம் நடித்து தருவதாக ஒப்பந்தமானது. ஆனால் அவர் ஒப்பந்தப்படி நடித்து கொடுக்கவில்லை. இதனால் ரூ.6 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.