சினிமா செய்திகள்

விஜய் முதல் அமைச்சர் ஆனதும்... நம்பிக்கையோடு ஆர்.ஜே பாலாஜி சொன்ன கருத்து

இயக்குனரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி, விஜய் மீது மக்களை போலவே நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. அக்கட்சியின் தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் முதல் அமைச்சராக பதவியேற்றுள்ளார். விஜய் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விஜய்க்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி, விஜய் மீது மக்களை போலவே நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார். ஆர்.ஜே பாலாஜி இது தொடர்பாக கூறியதாவது: திரைத்துறையை சார்ந்த விஜய் முதல்வராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வருகை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மக்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் இருக்கிறேன்’’ என்றார்.